• Mar 29 2024

அட.. என்னப்பா சொல்றீங்க! விஜய்க்கு இங்கிலீஷ் பேசத்தெரியாதா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் நல்ல வருவாயை படம் ஈட்டியது. அதன்படி உலக அளவில் படம் ரூ.300 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.  தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வெளியான படம் அங்கும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ''விஜய்க்கு சரியாக ஆங்கிலம் பேச வராததால தான் அவருடைய படங்களின் ப்ரோமோசனுக்கு போக மாட்டேங்குறாரு என்னு சொல்லுறாங்க ..இது உண்மையா''? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கு சினிமா நெட்டிசன்கள் ''வாரிசு பட புரமோஷனுக்கு என் போகலாமா அதுக்கு ஒரு காரணம் இருக்கு படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதற்கு அதுநாள் தான் ஆந்திராவிலும் ரிலீசாக இருந்தது கடைசியில் ஆந்திராவில் சிரஞ்சீவி பால் ஆகியோரின் படங்கள் வர இருப்பதனால் அவர்களுக்கு போட்டியாக இந்த வாரிசு  படத்தினை கொண்டு இறக்கினால் அவங்களுடைய விரோதத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் வாரிசு படமே ரெடி ஆகாமல் இருக்கிறது போல் 2 நாட்கள் தள்ளி வைச்சிட்டாங்க..இது விஜய்க்கு தெரிந்ததால் ப்ரோமோஷனுக்கு போகல ,இது தான் காரணம் ..ஆகவே இதுக்கும் ,ஆங்கில புலமைக்கும் சம்மந்தமில்லை'' என விளக்கம் அளித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement