• Mar 29 2024

அடடே மீனாவின் அம்மாவா இவங்க...? அழகில் மகளையே உரிச்சு வைச்ச மாதிரி இருக்காங்களே...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பலர் கதாநாயகியாக மாறி ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விடுவது இல்லை. ஆனாலும் ஒரு சிலர் எவ்ளோ காலம் ஆனாலும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார். அவற்றில் மீனா, ஸ்ரீதேவி போன்றவர்களைக் குறிப்பிட்டு கூற முடியும். 


அந்த வகையில் நடிகை மீனா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அன்புடன் ரஜினிகாந்த்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் பல முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து ஜோடியாக நடித்திருக்கின்றார்.

மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டு, வித்யா சாகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு குடும்ப பந்தத்திலும் இணைந்து கொண்டிருக்கின்றார். இவர்களுக்கு நைனிகா என்ற அழகிய மகளும் உள்ளார். 


அம்மா மீனாவை போன்றே மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த 'தெறி' படத்தில் அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதை தன்னுடைய மழலை பேச்சால் கொள்ளை கொண்டார் நைனிகா.

மீனா தான் ஒரு சிறந்த நடிகை என்பதை திரையுலகில் நிரூபித்தது போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஒரு மனைவியாகவும், அம்மாவாகவும் சிறப்பாக செயல்பட்டார். எனினும் எதிர்பாராத விதமாக அவரின் கணவர் வித்யா சாகர் சமீபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கண்ணழகி என சிறப்பாக அழைக்கப்படுகின்ற மீனாவின் மகள், மற்றும் கணவரைத் தெரியாதவர்கள் இல்லை. அவர்களின் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. 

எனினும் முதல் தடவையாக மீனாவின் அம்மாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அப்புகைப்படத்தில் மீனாவைப் போன்றே அவரின் அம்மாவும் ரொம்பவே அழகாக இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement