• Apr 20 2024

தளபதி 67 படத்தின் காஷ்மீர் ஷுட்டிங்கில் இணைந்த ஏஜண்ட் டீனா- அப்போ சம்பவம் நிறைய இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது.

 காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குநராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். 


இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.


இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்கு படக்குழு காஷ்மீர் செல்லும் புதிய பயண வீடியோவை படநிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, நடன இயக்குநர் தினேஷ் மற்றும் படக்குழுவினர் உள்ளனர். இந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ஏஜன்ட் டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வசந்தியும் உள்ளார்.


 வசந்தி நடன இயக்குநர் தினேஷின் உதவியாளர் ஆவார்.தளபதி 67 படத்தில் வசந்தி நடிப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. மேலும் தளபதி 67 படத்தில் நடன இயக்குநராக தினேஷ் பணிபுரிவதும் குறிப்பிடத்தக்கது.


























Advertisement

Advertisement

Advertisement