• Dec 05 2022

நயன்தாராவைத் தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபல நடிகை!- குவியும் வாழ்த்துக்கள்

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!

ஆஸ்திரேலிய நடிகையான ரிபெல் வில்சன், நைட் அட் த மியுசியம் 3, குங் ஃபூ பாண்டா 3, பிட்ச் பெர்ஃபெக்ட், கோஸ்ட் ரைடர், போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

இவர் அண்மையில் வாடகைத் தாய் மூலம் ஓர் பெண் குழந்தையினைப் பெற்றார்.அந்தக் குழந்தைக்கு 'ராய்ஸ் லில்லியன்' என்று பெயரிட்டுள்ளார்.இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


அந்த பதிவில் "கடந்த வாரம் வாடகைத் தாய் மூலம் பிறந்த எனது முதல் குழந்தையான ராய்ஸ் லில்லியன் பிறந்ததை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். அவள் மீது நான் வைத்திருக்கும் அன்பை என்னால் விவரிக்க முடியாது. அவள் ஒரு அழகான அதிசயம்"


இதில் எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன் (நீங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும்), குறிப்பாக அவளை கருணையுடனும், அக்கறையுடனும் சுமந்து பெற்றெடுத்த எனது அழகான வாடகை தாய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.


எனது சொந்த குடும்பத்தைத் தொடங்க எனக்கு உதவியதற்கு நன்றி, இது ஒரு அற்புதமான பரிசு. சிறந்த பரிசு!!. சிறிய ராய்ஸுக்கு கற்பனை செய்யக்கூடிய அனைத்து அன்பையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். நான் விரைவாக கற்றுக்கொள்கிறேன்...

அனைத்து அம்மாக்களுக்கும் எனது மிகுந்த மரியாதை! நானும் உங்கள் கிளப்பில் இருப்பதில் பெருமை கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.ரிபெல் வில்சனின் இந்த பதிவிற்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைப் போல தமிழில் பிரபல நடிகையான நயன்தாராவும் அண்மையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்பதும் முக்கியமாகும்.