• Apr 20 2024

மாதவனின் மகனைத் தொடர்ந்து.. விளையாட்டில் சாதனை படைத்த தனுஷ் மகன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும் ஆவார். இவர் '3, வை ராஜா வை' போன்ற பல படங்களை இயக்கி இருக்கின்றார். இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்போது 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.


சினிமாவில் பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீப காலமாக உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். இவரைப் போலவே இவரின் மகன்களும் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள். 


அந்தவகையில் தற்போது ஓட்டப் பந்தயத்தில் இவரின் மகன் சாம்பியன் வென்று சாதனை படைத்து இருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றார். இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement