• Feb 02 2023

ஜெயிலுக்கு போனதால் வெஃப் சீரியல் பற்றி யோசணை கிடைச்சிச்சு- குஷியாக சிறை தண்டனை குறித்து பேசிய நாஞ்சில் விஜயன்

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!


விஜய் டிவியல் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வித்தியாசமான தோற்றங்களில் களமிறங்கி பலரையும் சிரிக்க வைத்தவர் தான் நாஞ்சில் விஜயன். பெண் வேடங்களில் இவர் தோன்றி நடித்த பல நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

இந்நிலையில், நாஞ்சில் விஜயன் பிரபல சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார்.அதன்படி சூர்யா தேவி அளித்திருந்த அவதுறாக பேச்சு உள்ளிட்ட வழக்குகளில் நாஞ்சில் விஜயனை சென்னை வளசரவாக்கம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  பின்னர் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள நாஞ்சில் விஜயன், பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது, “எனக்கு நான் கைதாகும் முன்புவரை விஷயம் தெரியாது. புழல் சிறைக்கு அழைத்துச் சென்றர்கள். சிறையை இதற்கு முன் நான் படத்தில் தான் பார்த்திருக்கிறேன். சிறைக்குள் போகும்போது மாலையை கழட்டச் சொன்னார்கள். அதற்கும் நான் அழுதேன். பின்னர் அருகில் இருந்த மரத்தில் சென்று மாலையை கழட்டி வைத்தேன். உடன் இருந்த காவலர் ஒருவரும் மாலை போட்டிருந்தார். அதனால் என்னுடன் சேர்ந்து கோஷம் போட்டார்.


பின்னர் காவலர்களும் எனக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை வார்த்தைகளை தந்தார்கள். சரி நானும் சிறை அனுபவத்தை எப்படி இருக்கும் என பார்க்க தயாரானேன். கல்லூரி விடுதி போல் இருந்தது.  இரவு 2 மணி வரை விசாரணை கைதிகள் வந்தவண்ணம் உள்ளனர். நானோ அவர்களை பாவமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களோ என்னை பார்த்து ஆறுதல் சொல்கின்றனர். காலையில் ஃபைல் ஃபைல் என சத்தம் வருகிறது.

அந்த சத்தம் வந்தால், அனைவரும் குத்தவைத்து வரிசையாக கைதிகள் அமரவேண்டும். அப்போது காவலர்கள் நம்மை எண்ணிவிட்டு செல்வார்கள். பின்னர் சிறைச்சாலையை சுற்றிப் பார்த்தேன். அதன் பின்னர் என் வீட்டார், அடுத்த நாள் மனு போட்டு வந்தனர், பெயிலுக்கான வேலையை செய்தனர். இதனிடையே ஜெயிலுக்குள் இருந்த சிறை வாசிகளின் கதையை கேட்டேன். வெப் சீரிஸிற்கு சில யோசனைகல் கிடைத்தது. நான் வீட்டில் இருக்கும்போது குடித்த சுடுதண்ணி போல் தான் அங்கு டீ இருந்தது. எனக்கு பெரிதாக பசி இல்லை. ஆனால் அங்கு இருந்தவர்கள் ஒரு கப்பில் தண்ணீர் பிடித்து பிஸ்கட், பிரட்டை அந்த தண்ணீரில் அமிழ்த்தி சாப்பிடுவார்கள்.


சிலரின் கதை இன்னும் கஷ்டமா இருக்கும். ஒருவன் தனது 1 வயது குழந்தையை பார்க்க முடியாமல் கஷ்டப்பட்டான். வெளியே சென்ற பின்னர் அவனது வீட்டார்க்கு உதவிகளை செய்தேன். வெள்ளை சாதம், புளி சட்னி, கொஞ்சம் தண்ணீர் மாதிரி சாம்பார். மாலைக்குள் நாம் வாங்கிய சாப்பாட்டை தான் இரவும் சாப்பிட வேண்டும். இதை தவறு என்று சொல்ல முடியாது. சிறை தண்டனை அப்படித்தான் இருக்கும். என் புகைப்படம் பேப்பரில் வந்தது. நான் சோகமாக இருந்தால், சுற்றி இருந்தவர்களோ மாஸ், கெத்து என பேசினார்கள். இதனிடையே எனக்கு பிரியமான 2 வக்கீல்கள் பெயிலுக்கு அப்ளை செய்ததால், பெயில் கேன்சல் ஆனது. நான் 100% தன்னம்பிக்கையான மனிதன். வெளியே வரும்போது 200% தன்னம்பிக்கையுடன் வந்துள்ளேன். ” என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement