• Jun 01 2023

மூத்த மகளைத் தொடர்ந்து ரஜினியின் இளைய மகள் வீட்டிலும் திருட்டு... போலீசில் பரபரப்பு புகார்...!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்குநராக இருந்து வருகிறார். அதேபோன்று சௌந்தர்யா என்ற இளைய மகளும் உண்டு.


கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


இதனையடுத்து இரண்டாவது மகளான சௌந்தர்யா வீட்டிலும் தற்போது ஒரு திருட்டு இடம்பெற்றுள்ளது. அதாவது தனது சொகுசுக் காரின் சாவியைக் காணவில்லை என தேனாம்பட்டை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.


இவ்வாறாக ரஜினி வீட்டில் அடுத்தடுத்து இடப்பெற்ற திருட்டு விடயமானது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement