• Dec 04 2023

50நாட்களைக் கடந்தும் வசூலில் மாஸ் காட்டும் 'லவ் டுடே'... இதுவரை செய்த வசூல் விபரம் இதோ.!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ரசிகர்களைக் கவர்ந்த படம் என்றால் அது சமீபத்தில் வெளிவந்த 'லவ் டுடே' படம் தான். இப்படத்தை 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி இதில் நடித்தும் இருக்கிறார். மேலும் லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறிப்பாக டீன் ஏஜ் ரசிகர்களுக்கு அதிகரித்து வந்தது.


அதாவது செல்போன் மாறிய பிறகு அவர்களின் காதல் என்ன ஆனது என்பதே லவ் டுடே படத்தின் கதையாகும். நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இத்திரைப்படமானது முதல் நாளில் பெரிதாக கலெக்சன் எதுவும் இல்லை. ஆனால் பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொடுத்த நல்ல விமர்சனத்தை அடுத்து, அதிகமான திரையரங்கில் படம் திரையிடப்பட்டன. 


அந்தவகையில் தற்போது இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அந்தவகையில் இப்படத்திற்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்து சில நாட்களிலேயே எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கப்போடு போட்டு வருகின்றது. 


இந்நிலையில், இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ள 'லவ் டுடே' திரைப்படம் இதுவரை ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement