• Apr 24 2024

நீண்ட நாட்களுக்குப் பிறகு குட்டி வயிறு தெரிய வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை திவ்யாஸ்ரீ- இப்போ எத்தனை மாதம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபல சீரியல் கேளடி கண்மணி  மூலம் அறிமுகமானவர்கள் திவ்யா ஸ்ரீ, ஆர்நவ் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததோடு அண்மையில் திருமணம் செய்து கொண்டதாகவும் திவ்யா கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படம் வெளியிட்டிருந்தனர்.

இருப்பினும் இந்த புகைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே அர்னவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் தனது குழந்தையை அழிக்க முயற்சி செய்வதாகவும் திவ்யா வீடியோ வெளியிட்டிருந்தார்.


இதனை அடுத்து அர்னவ் மீது வழக்குப் போடப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.தற்பொழுது பிணையில் விடுதலை பெற்று இருக்கின்றார். இதனை அடுத்து இருவரும் தமது கெரியரில் அதிக ஈடுபாடு காட்டி  வருவதோடு சீரியலில்  தொடர்ந்து நடித்து வருகின்றனர்.


இந்த நிலையில் திவ்யா தனக்கு 5 மாதங்கள் ஆகி விட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement