• Nov 28 2022

ADK VS ஷிவின் இடையில் முற்றிய வாக்குவாதம்-வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்-பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Listen News!
Aishu / 6 days ago
image
Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கின்றது.

இதில் அடுத்தடுத்த நாட்களில் யார் வெளியேறுவார்? யார் டைட்டிலை பெறுவார் என்று பிக் பாஸ் ரசிகர்கள் இப்போதே யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளதால், முகத்திற்கு நேராக ஒரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் மீது கடுப்பில் உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது வீக்லி டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதாவது பிக்பாஸ் நீதிமன்றம் என்ற டாஸ்கே அது.அதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்ந்தெடுக்க வேண்டும் .அவர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வாதாடுவார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் பிக்பாஸ் நீதிமன்றம் டாஸ்கில் நீதிபதியாக இருக்கும் ADKயிற்கும் வழக்கறிஞராக இருக்கும் ஷிவினுக்கும் வாக்குவாதம் முற்றி பிக்பாஸ் கோர்ட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றார் ஷிவின்.அதாவது ஜட்ஜ்மன் முடிந்தும் ஷவின் தன்னுடைய கருத்தை முன்வைக்கின்றார்.இதனால் ADK ....மரியாதை இல்லாமல் பேசினால் நீங்கள் வெளியே செல்லுங்கள் எனக் கூறி ஷவினை வெளியேற்றுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...