• Dec 09 2022

அதிதி என்னுடைய காதலி -விருமன் படத்தை பார்த்து காதல் வலை வீசிய கூல் சுரேஷ்

Listen News!
stella / 3 months ago
image
Listen News!

கார்த்தி, அதிதி ஷங்கரின் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் விருமன். இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன்டிஎஸ் தியேட்டருக்கு விசிட் செய்து நடிகை அதிதி ஷங்கர் பார்த்துள்ளார்.

அங்கே கூல் சுரேஷும் படம் பார்த்த நிலையில், அவர் பேசிய வீடியோ ஒன்று டிரெண்டாகி வருகிறது. ரசிகர்கள், விமர்சகர்கள்,யூடியூபர்களுக்கு எல்லாம் முன்னாடி முதல் ஆளாக விருமன் படத்தையும் பார்க்க வந்து விட்டார் நம்ம வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு கூல் சுரேஷ்.தியேட்டரில் அதிதி ஷங்கரை பார்த்ததும் இவர் செய்த செயலை வீடியோவாகவே எடுத்து தியேட்டர் நிர்வாகமே தற்போது வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தியேட்டரில் பார்த்த கூல் சுரேஷ் தனது சில்லறையை உண்மையாகவே சிதற விட்டுட்டேன் என கீழே கிடந்த காசையும் எடுத்துக் காட்டி பேசியுள்ள வீடியோ ரசிகர்களை ஜாலியாக்கி உள்ளது.

அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கே அறிமுகமாகி உள்ளார். அதற்குள் அதிதி என்னுடைய காதலி என கூல் சுரேஷ் காதல் வலையை வீசியதை பார்த்ததும் மற்ற ரசிகர்கள் டென்ஷன் ஆகி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்: