• Apr 19 2024

அடேங்கப்பா வேற லெவல் அப்டேட்டாக இருக்கே- வாரிசு படத்தை முதலில் பார்க்கப் போவது யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வாரிசு படம் ஜனவரி 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரில் வருகிறது. தெலுங்கில் இப்படம் 15ம் திகதி வெளியாகவுள்ளது.

ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் ரன்னிங் டைம் 170 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகளாம், U சான்றிதழும் பெற்றுள்ளது.இந்நிலையில் வாரிசு குடும்ப புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டு பட ரிலீஸ் நெருங்குவதை தெரிவித்திருந்தது படக்குழு.


இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் கடந்த வாரம் படத்தின் டிரைலர் வெளியானது. அந்த ட்ரெய்லரில் வாரிசு பக்கா குடும்ப செண்டிமென்ட் படம் என்பது தெரியவந்துள்ளது.


 இந்த நிலையில் முழு படமும் தயாராகி முதலில் நடிகர் விஜய் தான் பார்க்க இருக்கிறாராம். இன்று மாலை தனி திரையரங்கில் விஜய் படக்குழுவினருடன் பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது.படத்தை பார்த்த பின் வாரிசு படத்திற்கு முதல் விமர்சனம் கொடுக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement