• Mar 28 2023

சேர் ஒரு பஞ்ச் அடிச்சா மொத்த யூனிட்டும் சிரிக்கும்- பகாசூரன் நடிகரை அவமானப்படுத்திய விஜய்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நட்டி என்கிற நட்ராஜ். இவர் நடித்த சதுரங்க வேட்டை திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் இவர் ஹிந்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜப் வீ மெட், லவ் ஆஜ் கல், பிளாக் ஃப்ரைடே, லாஸ்ட் டிரெயின் டூ மஹாகாளி உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் பிரபல சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அப்போது, தனது சினிமா வாழ்வு குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். தான் சிறுவயதில் இருந்தே அசைவ உணவுகளை தொட்டுக்கூட பார்த்ததில்லை எனவும் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஒருமுறை தனக்கு சிக்கன் பீஸ் ஒன்றை அளித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது, தன்னுடைய முகபாவனையை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு என அவர் சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார்.


இதைத் தொடர்ந்து பேசிய அவர்,"சின்ன வயசுல இருந்தே நான் வெஜ் சாப்பிட்டது இல்ல. எப்போதுமே வெஜிடேரியன் தான்" என்றார். அப்போது நடிகர் விஜய் குறித்து அவர் பேசுகையில்,"விஜய் சார் இதுதான் வேணும்னு சொல்ல மாட்டாரு. ப்ரொடக்ஷன்-ல இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் னு கேட்டு அதையும் சாப்பிடுவார். ஆனால், எப்போதுமே கொஞ்சம் தான் சாப்பிடுவாரு. வெயிட் வந்துடும்னு இல்ல, இயல்பாவே ரொம்ப கம்மியா சாப்பிட்டு பழக்கம் அவருக்கு" என்றார்.


தொடர்ந்து நடிகர் விஜய்யின் நகைச்சுவை உணர்வு குறித்து பேசிய நட்டி," விஜய் சார் எப்போதுமே அமைதியா இருப்பாரு. ஆனா, ஒரு பஞ்ச் அடிச்சா மொத்த யூனிட்டும் சிரிச்சிடும். ஒருமுறை என் அசிஸ்டன்ட் தப்பு பண்ணான். அதை திருத்த சொன்னேன். திரும்பி அதையே செஞ்சுட்டான். அப்போ, தம்பி எனக்கு இன்னொரு முகமும் இருக்கு-ன்னு சொன்னேன். மானிட்டரை பார்த்துட்டு இருந்த விஜய் சார், டக்குன்னு திரும்பி "அந்த முகமாவது நல்லா இருக்குமா?"-னு கேட்டார். அவ்வளவு தான் மொத்த யூனிட்டும் சிரிச்சிடுச்சு. நானும் சிரிச்சிட்டேன்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement