• Jun 04 2023

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ள முக்கிய சினிமாப் பிரபலம்... அடடே இவரா..? குஷியில் ரசிகர்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகிறீர்கள்.

இந்நிலையில் தற்பொழுது 9ஆவது சீசன் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த சீசனில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான போட்டி நடைபெற்றது. அதுமட்டுமல்லாது கடந்த ஒரு வாரத்திற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர் விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருந்தார்.


அதேபோன்று அவருக்கு முன்னதாக டி. ராஜேந்தர், பாக்யராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா என்ட்ரி கொடுக்கவுள்ளார் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில் வரும் வாரம் யுவன் ஷங்கர் ராஜா விருந்தினராக கலந்துகொள்ளப் போவதால் இந்த சுற்று அரையிறுதி சுற்றாக கூட இருக்கக்கூடும் எனவும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement