• Jun 04 2023

வற்புறுத்திய தந்தை... காதலால் வாழ்க்கையை இழந்து தற்கொலை செய்த நடிகை விஜி...!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

குறிப்பாக 80காலப்பகுதியில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை விஜி. அந்தவகையில் இவர் 'கோழிக்கூவுது' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கார்த்தி, பிரபு உள்ளிட்ட பலருடனும் இணைந்து நடித்துள்ளார்.


விஜியின் நடிப்பில் கடைசியாக 2000 ஆம் ஆண்டு 'சிம்மாசனம்' என்ற படம் வெளிவந்தது. அப்படம் வெளியான சில மாதங்களில் விஜி தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்தார். 

இந்நிலையில் அவரின் தற்கொலை குறித்து பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில தகவலை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "விஜி வெள்ளந்தியாக இருப்பவர். அவரின் தந்தையின் வறுபுறுத்தலால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். கரேத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல கலைகளை கற்ற விஜிக்கு இயக்குநர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.


இவ்வாறாக விஜி ஏற்கனவே காதலித்து திருமணம் செய்த இயக்குநருடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அந்த இயக்குநரோ விஜியை காதலிக்கவில்லை என்னுடைய தோழிதான் அவர் என்று கூறி கழட்டிவிட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்து ஒருசில நாட்களில் தற்கொலை செய்து கொண்டார் விஜி" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement