• Sep 27 2022

16 வருடங்களுக்கு பின் விஜயுடன் இணையவுள்ள நடிகை திரிஷா..? பெரும் எதிர்பார்ப்ப்பில் ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.இப்படத்தை அடுத்து, விஜய் நடிக்கவுள்ள படம் விஜய்67. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின், லோகேஷ் – விஜய் இணையவுள்ள படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் வேலைகளைத் தொடங்கியுள்ளதால், சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக விலகவுள்ளதாக லோகேஷ் தெரிவித்தார்.

தளபதி 67 திரைப்படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் ஆனால் அவர் வில்லி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

எனினும் இந்த நிலையில் தளபதி67 படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது

அத்தோடு விஜய்யுடன் கடைசியாக நடிகை திரிஷா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், அதற்கு முன் கில்லி, திருப்பாச்சி படங்களில் விஜய்யுடன் நடித்திருந்தார் .

இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விஜய்யுடன் த்ரிஷா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%