• Dec 10 2022

நடிகை தமன்னாவுக்கு விரைவில் டும் டும் டும் - அடடே மாப்பிள்ளை யார் தெரியுமா?

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தமன்னா.இதனைத் தொடர்ந்து படிப்படியாக முன்னேறி விஜய் ,அஜித், விஷால் ,சூர்யா ,கார்த்தி, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் எனலாம்.

இது தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருவதோடு வெப் சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.மேலும் தற்பொழுது இவருக்கு உடல் எடை அதிகரித்த காரணத்தால் படவாய்ப்புக்கள் குறைந்து விட்டன. இதனால் போட்டோ ஷுட்களை நடத்தி வருகின்றார்.


இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமன்னா தன் வீட்டில் பார்க்கும் பையனை தான் திருமணம் செய்வேன் என முன்பிருந்தே கூறி வருகிறார். தற்போது மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார்.

இதற்குமுன் தமன்னா திருமணம் பற்றிய செய்தி பரவினால் அது வதந்தி என உடனே விளக்கம் அளித்துவிடுவார். ஆனால் தற்போது அவர் திருமண செய்தியை மறுக்கவில்லை.


அதனால் தமன்னாவுக்கு மும்பை தொழிலதிபருடன் திருமணம் நடப்பது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. மேலும் தமன்னாவே திருமணத்தை விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.