• Apr 01 2023

ஜெயிலர் Shooting வீடியோவை பதிவிட்ட நடிகை தமன்னா.!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்புக்காக மங்களூரில் இருக்கிறார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகி பாபு, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது, இப்பொது படக்குழு 70% படப்பிடிப்பை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நடிகை தமன்னா ‘ஜெயிலர்’ ஷூட்டிங் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.


வீடியோவில் உள்ள நடிகை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருப்பதை காட்டுகிறது.

தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் நடிகை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ஜெயிலர். 

ரஜினிகாந்த் கடைசியாக 2021 இல் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார், அதைத் தொடர்ந்து  அவர் இந்த படத்தில் நடித்து வருகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்திலும் சூப்பர் ஸ்டார் சிறப்பு வேடத்தில் நடிக்க இருக்கிறார். 

இது தவிர, ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே.ஞானவேலுடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement