அம்மன்வேடம் போட்டு வாழையிலையில் சாப்பிடும் நடிகை தமன்னா- வைரலாகும் புகைப்படம்

178

தமிழ் சினிமாவில் தற்பொழுது பல முன்னணி நடிகைகள் இருந்து வருகின்றனர். அவர்களில் நயன்தாரா காஜல் அகர்வால் கன்சிகா த்ரிஷா தமன்னா எனப் பலர் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழில் அஜித் விஜய் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் என்பதும் தற்பொழுதும் பல படங்களில் நடித்த வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வாழை இலையில் உணவு சாப்பிடுவது போன்று உள்ளது.

மேலும் வாழையிலையில் உணவு சாப்பிட்டால் நாமே கடவுள் போன்று உணர்கிறோம் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது