• Apr 25 2024

அவங்க BODY, அவங்க இஷ்டம்...கிளாமர் பண்றது என்ன தப்பு? மனம் திறந்த நடிகை ரேஷ்மா!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 ‘வம்சம்’  ‘வாணி ராணி’  ‘மரகத வீணை’  ‘ ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தற்போது விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், இந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே, திரைத்துறையிலும் காலடி பதித்த ரேஷ்மா இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவரை மேலும் பிரபலமாக்கியது.தற்போது கிளாமர் ரோல்ஸ் பண்ணிட்டு வாறாங்க.

இது குறித்து சேனல் ஒன்றினால் நடத்திய பேட்டியில் ...டாரக்டர் வந்து கிளாமர் சடூல்ட் அப்ரோச் பண்ணும் போது எப்படி அப்ரோச் பண்றாங்க ? அப்படியான ரோல உங்களால ஸ்கிப் பண்ண முடியுதா இல்லன்னா தவிரக்க முடியாத காரணத்தால அந்த மாதிரியான ரோல்ஸ் பண்றீங்கங்களா? என்ற கேள்விக்கு ''அப்படி எல்லாம் ஒன்னுமில்ல யாராவது அப்ரோச்  பண்ணேக்க நிறைய ஸ்டோரீஸ் இருக்கும்.நான் வேலையென்னு வந்தா வெள்ளைக்காரன் படம் பண்ணுறத்துக்கு முன்னாடி நிறைய படங்கள் பண்ணன்.சிஸ்டர்,ஹீரோயின் என நிறைய ஹாரக்டர் ரோல்ஸ் பண்ணன்.அது எதுவுமே மக்கள் மத்தியில் நிக்கல.ஒரு ஆட்டிஸடா எந்த ரோல்ஸ் கொடுத்தாலும் நான் நடிக்கனும் ,அது தான் நம்ம வேல. நீங்க பண்ண நல்லா இருக்கும்னு சொல்லுறவங்களும் இருக்காங்க. அந்த மாதிரி தான் கிளாமர் ரோல்ஸ் கிடைச்சிச்சு.

வேலையென்னு வந்தா வெள்ளைக்காரன் படம் பண்ணுறத்துக்கு முன்னாடியும் கிளாமர் ரோல்ஸ் நிறைய வந்திச்சு.இதெல்லாம் வேணாம்னு நிறைய ரோல்ஸ விட்டிருக்கன். ஆனா இப்போ நான் நிறைய கிளாமர் ரோல்ஸ் பண்ணியிருக்கன்.சத்தியராஜ் சாரோட ஒரு ஹாரக்டர், அப்புறம் மூணு முப்பது மூணு படத்திலையும் பண்ணியிருக்கன்.ஆர் ஜே பாலாஜி சாரோட படம் பண்ணியிருக்கன்,இதெல்லாம் இன்னும் ரிலீஸ் ஆகல .ரிலீஸ் ஆனா தானே தெரியும்.நான் நிறையே  சக்சஸ் பார்த்திருக்கேன் அதுக்கு பின்னாடி நிறைய ஃபெயிலியர்ஸ் கூட பார்த்திருக்கன்.10  வருஷமா சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்தும் இப்பதான் தெரியவந்திருக்கன்.இப்படியான ரோல்ஸ் பண்றத்துக்கு நான் ஹப்பி.என கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement