செல்போனில் வீடியோ எடுத்த போது வழுக்கி விழுந்த நடிகை ஸ்ரேயா- அறிவுரை கூறி வரும் ரசிகர்கள்

225

உலகின் சிறந்த கதக் நடனக் கலைஞர்களில் ஒருவரான ஷோவனா நாராயணனிடம் பயிற்சி பெற்றார். நடன பிரபலமானதைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவரது முதல் தெலுங்கு படம் இஷ்டம். இந்தத் திரைப்படம் கடந்த 2001-ம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இன்னும் பிரபல்யமானார்.

இவர் தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா, கொரோனா லாக் டவுன் சமயத்தில் தான் குழந்தை பெற்றதாகவும், குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிறது என்றும் , வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.இதை தொடர்ந்து நடிகை ஸ்ரேயாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவ்வப்போது தன்னுடைய குழந்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தன்னுடைய தாய்மை அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி வீடியோ ஒன்றை எடுத்துக் கொண்டே இவர் பேசிய போது, திடீர் என கீழே வழுக்கி விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செல்போன் வீடியோக்களில் தங்களை பற்றி பேசி, பகிர்ந்து கொள்வது தவறில்லை, அதே நேரத்தில் சற்று கூடுதல் கவனமாகவும் இருக்க வேண்டும் என, பலர் ஸ்ரேயாவுக்கு தங்களுடைய அறிவுரையை கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.