• Sep 13 2024

குடும்பத்துடன் தியேட்டரில் 'ஜெயிலர்' படம் பார்த்த நடிகை ஷாலினி - வைரல் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்கி இருந்தார் .படம் வெளியான அன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே ஒரு வருத்தம் தான்.

அதிகாலை காட்சிகள் இங்கு ரத்து செய்யப்பட்டிருந்தது, ஆனாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லாமல் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை செய்ய தொடங்கியுள்ளது.தற்போது வரை நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.


இரண்டு நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 150 கோடியை எட்டிவிட்டது, இன்று மற்றும் நாளை வசூலை காண ரசிகர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிர்ரக்ள் என்றே சொல்லலாம்.

பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு வந்து ரஜினியின் ஜெயிலர் படத்தை கண்டு வருகின்றனர்.

அந்தவகையில்  நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது தங்கை ஷாமிலி மற்றும் சகோதரர் ரிச்சர்ட்டுடன் படம் பார்க்க திரையரங்கம் வந்துள்ளார்.

அவரைக் கண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.அந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement