நடிகை ஷகிலாவுக்கு உடல் நலம் சரியில்லையாம்-அதிர்ச்சியில் ரசிகர்கள்.

331

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருக்கும் விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி. இந் நிகழ்ச்சியானது இது வரைக்கும் 2 சீசன்களைக் கடந்துள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் குக்வித் கோமாளி சீசன் 2 இல் போட்டியாளராகப் பங்குபற்றி பிரபல்யமானவர் தான் நடிகை ஷகிலா

மேலும் இவர் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகி வெளியானது. தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியில் மற்றும் ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஷகிலாவின் உடல் நலம் குறித்து செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஷகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.அதில், தன்னைப்பற்றி வெளியான ஒரு செய்தி முற்றிலும் வதந்தி. நான் தற்போது மகிழ்ச்சியாகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றேன்.

அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மேலும் என்னைப் பற்றிய வதந்தி பரவிய உடன் ஏராளமானோர் தனக்கு போன் செய்து நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றி. குறிப்பாக இந்த அன்பை தெரிந்து கொள்ள வைத்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் தனது நன்றி’ என்றார். ஷகிலாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறதும் குறிப்பிடத்தக்கதாகும்.