விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சரண்யா துராடி
சீரியலில் கமிட்டாகி நடிப்பதற்கு முன் தொகுப்பாளராக களமிறங்கி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்தார். முதல் தொடரில் டாக்டராக நடித்த இவர் இரண்டாவதாக நடித்த ஆயுத எழுத்து தொடரில் கலெக்டராக நடித்தார்.
அதன்பிறகு சன் டிவி தொடரில் நடித்துவந்த இவர் பின் விஜய்யில் கடைசியாக வைதேகி காத்திருந்தாள் என்ற தொடரில் நடித்திருந்தார், ஆனால் தொடர் திடீரென பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
சீரியலில் நடிக்காமல் இருந்த சரண்யா துராடி நிறைய சுற்றுலா சென்று புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். இப்போது நடிகை குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது.
அதாவது நடிகை சரண்யா துராடி புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளாராம். ஜீ தமிழில் வரப்போகும் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார், மற்றபடி தொடர் குறித்து எந்த தகவலும் இல்லை.
Listen News!