• Sep 13 2024

அந்த இடத்தில் ஹார்ட் டிசைன் வரைந்த நடிகை சமந்தா - தீயாய் வைரலாகி வரும் புகைப்படம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சமந்தா.இவர் இயக்குநர் “கவுதம் மேனன்” இயக்கத்தில் வெளியாகிய “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

தற்போது கோலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.சமீபக்காலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இடைவேளையை சமந்தா எடுத்துள்ளார்.

வேலூர், கோவை, ஈரோடு என ஆன்மிக சுற்றுலாவை முடித்து விட்டு தோழிகளோடு பாலி சென்றிருந்த சமந்தா, சுற்றுலாவை முடித்துக் கொண்டு தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ரிலாக்ஸாக நேரம் செலவிட்டு வருகிறார். நேற்று நடந்த ‘குஷி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப் போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம் .அந்தவகையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.அத்துடன் தனது கையில் நெயில் ஆர்ட் வரைந்திருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தார் .இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement