வெப் சீரியலுக்காக வித்தியாசமான தோற்றத்தில் ஆளே மாறிப்போன நடிகை சமந்தா

216

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் காணப்படுகின்றார்கள். அவர்கள் வரிசையில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக காணப்படுபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகின்றார்.

மேலும் சமந்தா நாக சைத்தன்யா என்பவரைத் திருமணம் முடித்துள்ளார். இதன்பிறகு வழக்கமான கதாநாயகியாக அல்லாமல், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அத்தோடு திரைப்படங்களில் மட்டுமல்லாது தற்போது வெப் சீரியல்களிலும் நடித்து வருவதும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘தி பேமிலி மேன்’ என்கிற வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட்டாக முற்றிலும் புதிய ஒரு கேரக்டரில் தான் சமந்தா நடித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு சொல்லப்பட்ட வலுவான பின்னணி கதையை கேட்டுத்தான் இந்த வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சமந்தா.

அதற்கேற்றபடி இந்தப்படத்தில் மேக்கப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் தராமல், சற்றே வித்தியாசமான தோற்றத்தில் ஆளே மாறிப்போய் காட்சியளிக்கிறார் சமந்தா. இந்த வெப்சீரிஸை இயக்கியுள்ள பாலிவுட்டின் இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே இருவருடன் இணைந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: