• Jun 04 2023

நடிகைகள் சொல்ல தயங்கும் விஷயத்தை தைரியமாக வெளியே சொன்ன நடிகை சமந்தா..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நேரத்தில் சமந்தாவின் தைரியம் பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் என்றால் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தங்களுக்கு ஏதாவது உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் அதை வெளியே சொல்ல நடிகைகள் அஞ்சுகிறார்கள்.

உடல்நல பிரச்சனை குறித்து வெளியே தெரிந்தால் மார்க்கெட் பாதிக்கப்படும் என்பதே அவர்களின் பயம். அப்படி இருக்கும்போது தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதை அதுவும் புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தெரிவித்தார் சமந்தா.தனக்கு நோய் இருப்பதை அவர் தைரியமாக தெரிவித்த விதம் தான் அனைவரையும் கவர்ந்தது.நம்பிக்கை கொடுத்தார்கள்.

சமந்தாவுக்கு அரிய வகை நோய் இருப்பதால் அவரின் கெரியர் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளும், வெப்தொடர் வாய்ப்புகளும் வந்து குவியத் தான் செய்கிறது.அதில் ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம். தனக்கு உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லி டூப் போடாமல் நானே தான் நடிப்பேன் என நடித்திருக்கிறார். அப்படி ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது காயமும் அடைந்தார்.

தற்போது மீண்டும் சிகிச்சையில் இருக்கிறார். அது தொடர்பான புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தைரியமாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதை பார்த்து பிற நடிகர்களும், நடிகைகளும் தங்களுக்கு இருக்கும் நோய் பற்றி பேசத் துவங்கினார்கள்.

சமந்தாவை அடுத்து அனுஷ்கா ஷெட்டி கூட தனக்கும் ஒரு அரிய வகை நோய் இருப்பதாக தெரிவித்தார். இப்படி ஒரு புது டிரெண்ட் உருவாக காரணமாக இருக்கிறார் சமந்தா.காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டது குறித்தும் வெளிப்படையாக பேசி வருகிறார். தன் வாழ்வில் நடந்த அனைத்தும் தனக்கு பாடம் கற்றுக் கொடுத்திருப்பதால் எதையும் மறக்கவிரும்பவில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement