தமிழரைத் திருமணம் செய்து தமிழ்நாட்டுப் பெண்ணாகத்தான் வாழ்வேன் என்று கூறிய நடிகை ராஷ்மிகா மந்தனா

154

கன்னட திரையுலகில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்குள், தெலுங்கு, தமிழ் மற்றும் தற்போது பாலிவுட் திரையுலகிலும் நடித்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவர் தற்பொழுது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் அனைவராலும் பேசப்படும் பரபரப்பான நாயகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றார் எனலாம்.

மேலும்தனது திறமையான நடிப்பு, கியூட் ரியாக்ஷன்ஸ், அழகு, அளவான கவர்ச்சி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி விட்டார்சமீபத்தில், பாட்ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் “டாப் டக்கர்” ஆல்பம் பாடல் அதிக ரசிகர்களால் பாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் மூலம் அறிமுகமான இவரை, அடுத்தடுத்த பல படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருவதாக, கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.இந்நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஷ்மிகா தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவே ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார்.

அதாவது “தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தமிழ் நாட்டின் உணவு வகைகள் அவரை வெகுவாக கவர்ந்து விட்டதாம். தமிழ் உணவுகளை மிகவும் நேசிப்பதாகவும், அதில் அது அறுசுவை இருக்கிறது. எனவே நான் ஒரு தமிழரை திருமணம் செய்து கொண்டு தமிழ் நாட்டு பெண்ணாக மாறிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.இவரது இந்தப்பேட்டி ரசிகர்கள் பலரைக் கவர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: