• Apr 19 2024

நடிகை பூர்ணாவின் திருமண வரவேற்புப் புகைப்படங்கள்- ட்ரெண்டாகி வரும் அசத்தலான வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பூர்ணா. இப்படத்தைத் தொடர்ந்து கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, காப்பான், தகராறு,கொடிவீரன், சவரக்கத்தி உள்பட பல படங்களில் நடித்திருக்கின்றார்.


தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிப் படங்களிலும் நடித்திருக்கின்றார்.இறுதியாக இவர் நடிப்பில் விசித்திரன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில்  நடிகர் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.


தற்போது மிஷ்கின் இயக்கும் பிசாசு-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் பிசாசு-2 படம் ரிலீசாக உள்ளது.


கேரளாவை சார்ந்த இவர், சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். மணமகன் சானித் ஆசிப் அலி JBS நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். துபாய் & அமீரகத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் ஆடிய நடன வீடியோ காட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன. மணமக்களின் குடும்பத்தினர் & நண்பர்கள் பாடல்களை பாடி ஆடும் இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.




Advertisement

Advertisement

Advertisement