• Jun 04 2023

நடிகை நஸ்ரியா எடுத்த திடீர் முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்- என்னாச்சு இவருக்கு?.....

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


பத்து வருடங்களுக்கு முன்பு நடிகை நஸ்ரியா தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து பாப்புலரான நடிகையாக இருந்தார்.நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

 அவர், சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே நடிகர் பகத் பாசிலைத்  திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர் எப்போது மீண்டும் தமிழில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.


இந்நிலையில் தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலத்திற்கு விலகி இருக்கபோவதாக அறிவித்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். மேலும் இவர் எதனால் இந்த முடிவு எடுத்தார் என்பது இன்னும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement