தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிகர் சிவாஜியின் மூலம் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் தெரிந்ததே.
மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இதனால் இவருக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இவர் நடித்த எஜமான், நாட்டாமை, முத்து, ஔவைசண்முகி, பாரதிகண்ணம்மா, ரிதம், திரிஷ்யம் போன்ற படங்கள் பல விருதுகளைப் பெற்றதும் தெரிந்ததே. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது மோகன்லால் நடிப்பில் வெளிவந்த திரிஷ்யம் 2 படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் பிசியாக இருந்து வருகிறார் நடிகை மீனா.தற்போது நடிகை மீனா கர்ப்பிணி கோலத்தில் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகை மீனா, நிறைய மாறிவிட்டது. இந்த கெட் அப் அணிவது அப்போது எளிதாக இருந்தது.
அதை மறைப்பதற்காக எப்பொழுதும் கனமான புடவைகளை அணிவது வழக்கம். ஆனால் இப்போது, எழும்பும் தோற்றத்திற்கும், உணர்விற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இயற்கையாகத் தோற்றமளிக்க வேண்டும் மற்றும் சிஃப்பான் புடவைகள் கூட அணியலாம் என பதிவிட்டுள்ளார்.