• Dec 01 2023

திடீரென சம்பளத்தை ஏற்றிய நடிகை மாளவிகா மோகனன்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இப்போது எத்தனையோ புதிய நடிகைகள் களமிறங்கி விட்டார்கள். அதில் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் கால் பதித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும் நடித்துள்ளார். 


அத்தோடு ஆரம்பத்தில் இருந்து பெரிய நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும் சரியான ஹிட் படம் எதுவும் இல்லை. 

மேலும் இவர் இதுவரை எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை என்றாலும் சம்பள விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக உள்ளாராம். இதனையடுத்து பெரிய தயாரிப்பு நிறுவனம் புதிய படத்திற்கு அவரை கமிட்செய்ய சென்றபோது அவரது சம்பளத்தை தாண்டி கோடிகளில் அதிகம் கேட்கிறாராம்.


இதனால் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் அவரை கமிட் செய்யலாமா வேண்டாமா என பின்வாங்கி விட்டார்களாம்.


Advertisement

Advertisement

Advertisement