• Apr 20 2024

லண்டனில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நடிகை குஷ்பு - வைரலாகும் வீடியோ

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை குஷ்பூ தமிழ் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். மேலும் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 


அதுமட்டுமல்லாமல் 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார் நடிகை குஷ்பூ. மேலும் இவர் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.


தற்போது நடிகை குஷ்பூ குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.


தற்போது நடிகை குஷ்பு லண்டனில் இருக்கிறார். அங்கு சென்றும் அவர் தவறாமல் ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அது என்னவென்றால் உடல் எடையை சுத்தமாக குறைத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த அவர் லண்டனிலும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வருகிறார். அதனை வீடியோவாக அவரே வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement