வித்தியாசமான கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ்-வைரலாகும் வீடியோ..!

956

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “இது என்ன மாயம்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். பின்பு தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், ரஜினி நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த அண்ணாத்த படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அத்தோடு கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.அந்த வகையில் தற்போது இயக்குனர் செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷ் சில டாப் நடிகர்களின் படத்திலும் நடிக்கவுள்ளார். அதன்படி கீர்த்தி சுரேஷ் தளபதி 66 படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அவரின் Halloween Day போட்டுக்கொண்ட கெட்டப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள அவரின் பதிவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றதாம்.