• Apr 19 2024

நடிகை கஜோலுக்கு இப்படியொரு மகளா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படஙகள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை கஜோல். பாலிவுட்டின் கனவு நாயகி என்றாலே அது நம்ம கஜோல் தான். அதுவும் இவர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த படங்களில் பெற்ற வெற்றிகளோ ஏராளம். ஒரு காலத்தில் இந்தி சினிமா கொண்டாடிய முக்கியமான ரீல் ஜோடிகளாக இவர்கள் வலம் வந்திருந்தார்கள்.

இவர் இந்தியில் மட்டுமன்றி தமிழ் சினிமாவிலும் கால் பதித்து தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார். அதாவது தமிழில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக 1997-ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த ஒரு படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு விட்டார்.

அப்படத்தினைத் தொடர்ந்து பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பின் 2017-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார்.

இவர் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் சிறந்த குடும்ப வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஒரு மகன் மற்றும், ஒரு மகள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தும பாலிவுட்டில் பல படங்களில் கணவன் மனைவி என இருவருமே போட்டி போட்டு நடித்து வந்திருந்தார்கள். எனினும் கஜோலின் கணவர் எதிர்பாராத விதமாக 2020 இல் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கஜோல் படங்களையும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற ஒருவர். அவ்வப்போது தனது புகைப்படத்தினையும், தனது குடும்பத்தினரின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் கஜோலின் பிறந்தநாள் அன்று மகள் நைசா தேவ்கன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

புகைப்படங்கள் இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement