பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் நடிகை காஜல்-குஷியான ரசிகர்கள்

622

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

அத்தோடு 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக் பாஸிலிருந்து தற்போது டாப் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளார்கள்.இதில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த பரிணாமமாக, பிக் பாஸ் ஓடிடி துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஓடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பாகும். 70 நாட்கள் நடைபெறவிருக்கும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில், நடிகை காஜல் பசுபதி கலந்துகொள்ள போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகை காஜல் பசுபதி இதற்கு முன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு, சில நாட்களிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: