• Apr 19 2024

நடிகை ஹன்சிகாவின் திருமண திகதி அறிவிச்சாச்சு- இவருடைய காதலன் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே எள்ளது. இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் சிம்புவும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

இப்படத்தினைத் தொடர்ந்து தற்பொழுது படவாய்ப்புக்கள் குறைந்ததால் இவர் திருமண பந்தத்தில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் படி 31 வயதாகும் இவருக்கு ஜெய்ப்பூரில் உள்ள அரச மாளிகையில்  வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை திருமணத்தை நடத்த இரு குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனராம். 


இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், நவம்பர் மாதம் ஹன்சிகா இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரது காதலனான சோஹோம் கதுரியா பிரபல தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மாத்திரமே கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement