• Apr 19 2024

நடிகை ஹன்சிகா நடிக்கும் 51வது படம் - வெளியானது மோஷன் போஸ்டர்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகை ஹன்சிகா, இயக்குநர் இகோருடன் த்ரில்லர் படமொன்றில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது, அந்த தகவல் உண்மையாகி ஹன்சிகாவுடன் ஆரி அர்ஜுனனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

கலாபக் காதலன் திரைப்பட இயக்குநர் இகோர் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் அவரது 51வது படத்திற்கு ‘மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரையில் படமாக்கப்பட்டது.

இப்படம் பெண்களை மையப்படுத்திய எடுக்கப்பட்ட திரில்லர் என்றும், ஹன்சிகா புதிய அவதாரத்தில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில், இப்படத்தில் ஆரி அர்ஜுனன் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, மணி ஒளிப்பதிவு செய்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement