இரு மகன்களுடனும் கியூட்டாக இருக்கும் நடிகை ஜெனிலியா- அட இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்களே?

974

தென்னிந்திய சினிமாவில் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தனது கியூட்டான நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர் மனதைக் கவர்ந்த நடிகை தான் ஜெனிலியா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அந்த வகையில் தமிழில் இவர் இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் உத்தம புத்திரன் என பல திரைப்படங்களில் நடித்து பிரபல்யமாகியிருக்கின்றார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இதனால் நடிப்பதில் ஆர்வம் காட்டாது சினிமாவை விட்டு விலகியிருக்கின்றார். எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் அவர் நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார்.

தற்போது ஜெனிலியா அவரது இரண்டு மகன்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட் புகைப்படம், ஜெனிலியாவின் மகன்கள் நன்றாக வளர்ந்துவிட்டார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.