• Apr 20 2024

நடிகை தீபிகா படுகோனின் தங்கச்சியா இவங்க- இரண்டு பேரும் ஒரே ட்ரெஸ்ஸில் சூப்பராக இருக்கிறாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தீபிகா படுகோன், இவர் கடந்த 2007 இல் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருந்த ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முக்கியமான நடிகையாக வலம் வருகின்றார்.

மேலும் இவர் இறுதியாக ஷகுன் பத்ராவின் கெஹ்ரையானில் நடித்தார், அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தீபிகாபடுகோன் மும்பைக்கு வெளியே புறநகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் தனது சகோதரி அனிஷா படுகோனுடன் இரவு உணவை உண்டு மகிழ்ந்தார். உணவகத்திற்குள் நுழைந்த தீபிகா, அனிஷா படுகோனை வரவேற்று அணைத்துக்கொண்டார்.

இருவரும் சிரித்துக்கொண்டே ஒன்றாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். "நன்றி" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியபடி அவர்கள் உணவகத்திற்குள் செல்வதற்கு முன் தீபிகா அனிஷாவின் தலையில் ஒரு முத்தம் கொடுத்தார். அனிஷாவும் பத்திரிகையாளர்களை நோக்கி கை அசைத்தார்.

கடந்த மாதம், தீபிகா மற்றும் அனிஷா, அவர்களது பெற்றோர்கள் பிரகாஷ் படுகோன் மற்றும் உஜ்ஜலா படுகோன் மற்றும் தீபிகாவின் கணவர் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடன் அமெரிக்காவில் ஷங்கர் மகாதேவனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement