• Apr 19 2024

கிழிந்த ஜீன்சில் மாஸ் காட்டும் நடிகை பவானி ரெட்டி...! லைக்ஸை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால்  இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் எழ கணவர் பிரதீப், திருமணம் ஆன எட்டு மாதத்திலேயே, தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள,  மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

நடிகை பவானி ரெட்டி விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.   பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய பாவனி மக்களின் மனதில் இடம்பிடித்தார். சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார் பவானி. 

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்,தற்போது ஜீன்ஸ் & சேட்டில் செம மாஸா போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement