• Apr 19 2024

பிக்பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேரும் நடிகை பாவனா?- அடடே ஹான்ஸம் நடிகருடன் தான் நடிக்கப் போகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பாவனா. இவர் ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் நரேன் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து  வெயில், தீபாவளி, ராமேஸ்வரம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்தும் பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென தமிழ் சினிமாவை விட்டு விலகினார்.


இதனை அடுத்து மலையாள சினிமாவில் நடித்து வந்ததோடு திருமண பந்தத்தில் இணைந்ததால் சினிமாவை விட்டு விலகினார்.இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ளாராம் பாவனா. தமிழில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள பாவனா இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

13 வருடங்களுக்கு பின் நடிகை பாவனா தற்போது தான் தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளார். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.













Advertisement

Advertisement

Advertisement