மீண்டும் நடிக்க வந்த நடிகை ஆனந்தி-எந்த தொடர் தெரியுமா?

237

சினிமாவைப் போன்று சின்னத்திரையும் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. அதில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி விடுகின்றனர்.

அதேபோன்று சின்னத்திரையில் நிறைய பேர் நடிக்க வந்தாலும் சிலர் மட்டுமே தொடர்ந்து பயணிக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6ல் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆனந்தி.

அதன் பிறகு,நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த நடிகை ஆனந்தி திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இப்போது நீண்ட இடை வேளைக்கு பின்னர் சினிமா பக்கம் வந்துள்ளார் ஆனந்தி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடிக்க உள்ளாராம்.

செந்தூரப்பூவே சீரியல் படப்பிடிப்பு தளத்தில் அவர் மற்றைய பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.