• Apr 20 2024

ஸ்பெயின் நாட்டில் குட்டைக் கவுணில் தோழிகளுடன் வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளியாகிய காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவரது நடிப்பில் வெளியாகிய கனா ,க/பெ ரணசிங்கம் ஆகிய படங்கள் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் சுற்றுலா சென்று அங்கிருந்து ஈபிள் கோபுரம் அருகில் அமர்ந்தும் நின்றும் நடந்தும் பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரான்ஸ் சுற்றுலாவை முடித்து கொண்டு நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். நெதர்லாந்து நாட்டின் காற்றாலை நகரமான Zaanse Schans & ஆம்ஸ்டர்டம் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கிருந்து புதிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

நேற்று முன்தினம் இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே பிரசித்தி பெற்ற கோலோசியம் அரங்கின் வெளியே எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் வாட்டிகன் நகரில் உள்ள மியூசியத்தில் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரில் தோழிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement