• Mar 23 2023

காதலித்து கழட்டி விட்ட நபர்... காதல் தோல்வியால் இரவு முழுவதும் அழுத நடிகை ஆத்மீகா..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழில் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த 'மீசைய முறுக்கு' என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இப்படத்தினையடுத்து 'கோடியில் ஒருவன்' என்ற படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.


அதுமட்டுமல்லாது 'காட்டேரி, நரகாசுரன்' எனப் பல படங்களிலும் நடித்து வந்த இவர் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் 'கண்ணை நம்பாதே' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இவரிடம் காதல் தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்பட்டது. 


அதில் அவர் தான் காதலித்து தோல்வி அடைந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது "எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு உள்ளது. நானாக அந்தக் காதலை முறிக்கவில்லை. என்னை காதலித்தவர்தான் காதலை முறித்துக்கொண்டு போய் விட்டார். காதல் தோல்வி காரணமாக நான் சில தடவை இரவு நேரங்களில் அழுது இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.


மேலும் "காதல் முறிந்து போனதற்காக இப்போது நான் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன். பணம் புகழ் இரண்டிலும் பணம்தான் இங்கு முக்கியமாக இருக்கிறது. பணம்தான் யதார்த்தம்'' எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார் ஆத்மீகா.

Advertisement

Advertisement

Advertisement