சைமா விருதில் சிறந்த காமெடி நடிகருக்கான விருதினைப் பெற்ற நடிகர் விவேக்- மகளின் நெகிழ்ச்சிப் பதிவு

669

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி மக்கள் அனைவரையும் சோகத்துக்குள் உட்படுத்தியது எனலாம்.

இவரது இறப்பு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தாலும் திரையுலக நட்சத்திரங்கள்அரசியல்வாதிகள் பொதுமக்கள் எனப்பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தமையும் தெரிந்ததே. அத்தோடு மறைந்த விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பலர் மரக்கன்றுகளை நட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான தாராள பிரபு படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இது குறித்து விவேக்கின் மகள் ட்விட்டர் பக்கத்தில், எனது அப்பாவிற்கு தாராள பிரபு படத்திற்காக விருது கொடுத்ததற்கு நன்றி. அதனைப் பெற்று எங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ந்த யோகி பாபு அண்ணாவுக்கு நன்றி. ரசிகர்களுக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.