தளபதி விஜய்யின் அப்பா மற்றும் அம்மாவைத் திடீரென சந்தித்த நடிகர் விஷால்- என்ன காரணம் தெரியுமா?

589

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தாலும் தற்பொழுத இவர் நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே சுமாரான வெற்றியையே பெற்று வருகின்றது.

கடந்த தீபாவளி தினத்தன்று நடிகர் விஷால் நடிப்பில் எனிமி என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படத்தில் இவருடன் நடிகர் ஆர்யாவும் நடித்திருந்தார். அத்தோடு ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்கியதோடு வினோத் தயாரித்து இருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சென்று இருந்தனர். இதே விழாவில் கலந்துகொள்ள நடிகர் விஷாலும் சென்றிருந்தார் . அங்கு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபாவை விஷால் சந்தித்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டதாகவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.