• Mar 29 2024

மருந்து வாங்க காசு இல்லாமல் தவிக்கும் பிதாமகன் producer - உதவி செய்வாரா நடிகர் விக்ரம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல ஏ.எம்.ரத்னத்திடம் அசோசியேட்டாக பணியாற்றிய வி.ஏ.துரை, பின்னர் எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தயாரிப்பாளர் வி.ஏ.துரை, தமிழ் நடிகர்களின் பல படங்களை தயாரித்து, என்னமா கண்ணு, லூட்டு, பிதாமகன், கஜேந்திரா, நாய்க்குட்டிபோன்ற ஹிட் படங்களை வழங்கினார்.

தற்போது, பிதாமகன் தயாரிப்பாளர் உடல் நலம் சரியில்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், இப்பொது மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உதவி கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பராமரிக்க ஆள் இல்லாததால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில்  அகதியாக மாறியுள்ளாராம். மேலும், அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, கடும் சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளருக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என வி.ஏ.துரையின் நண்பர் ஒருவர் அந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த நடிகர் சூர்யா தனது ‘பிதாமகன்’ பட தயாரிப்பாளருக்கு ஆதரவாக வந்து வி.ஏ.துரையின் ஆரம்ப சிகிச்சைக்காக ரூ.2 லட்சத்தை கொடுத்து உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் ''என்னுடைய காலினை சரிப்படுத்த வேண்டும்,மருத்துவ உதவி வேண்டும்.பிதாமகன் படம்   50 இலட்சம் கிட்ட லாஸ்ட் ஆகிடுச்சு. தற்போது பாலாவும் பணத்தினை வேண்டிட்டு ஏமாத்திட்டாரு.நான் யாருக்கும் பாக்கி குடுக்க இல்ல.சினிமா இண்டஸ்ட்ரி பொறுத்தவரைக்கும் எனக்கு தான் பணம் தர வேண்டி இருக்குது.நான் மறுபடியும் வைத்தியசாலைக்கு போக வேண்டியிருக்கு .தயவு செய்து அந்த பணத்தினை திருப்பி குடுத்தீங்களானால் மருத்துவ சிலவுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

பிதாமகன் படத்தில் சூர்யாக்கு 15 லட்சம்,சியான் விக்கிரமுக்கு 1கோடி 25 இலட்சம்,பாலாக்கு 1 கோடி 15 லட்சம் சம்பளம் கொடுத்தேன்.நான் இப்போ உடம்புக்கு ரொம்ப முடியாம இருக்கிறதால,இந்த டைம் நீங்க நினைச்சா உதவி பண்ணலாம் மருத்துவ உதவி பண்ணுங்க சார்,நான் வேற எதுக்காகவும் கேக்கல'' என சியான் விக்ரமையும் கேட்டுக்கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement