• Apr 25 2024

திடீரென கோமா நிலைக்குச் சென்ற நடிகர் விக்ரம்... மருத்துவமனையில் கவலைக்கிடம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் விக்ரம் கோகலே. பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்ற இவரை ரசிகர்கள் செல்லமாக 'விக்ரம்' அழைத்து வந்தார்கள். அத்தோடு இவர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார்.


மேலும் விக்ரம் கோகலே ஒரு பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை சந்திரகாந்த் கோகலேவும் ஒரு மராத்தி நாடக நடிகராவார். இவரது கொள்ளுப்பாட்டி துர்காபாய் காமத் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார். 


இந்நிலையில் விக்ரம் கோகலே சமீபகாலமாக மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அதாவது 77 வயதான விக்ரம் கோகலே நவம்பர் 5ஆம் தேதி மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய நிலையில் அனுமதிக்கப்பட்டார். 

தொடர் மருத்துவ சிகிச்சைகள் இவருக்கு அளிக்கப்பட்டு வந்த போதிலும் விக்ரமின் இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் நேற்று மாலை கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். 


இதனைத் தொடர்ந்து விக்ரம் கோகலே காலமானதாக நேற்று இரவு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி இருந்தன. ஆனால் இதை அவரது மனைவி விருஷாலி மறுத்துள்ளார். அதுமட்டுமல்லாது அவரது உடல் நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் எனவும் கூறி இருக்கின்றார்.

இந்நிலையில் இவரின் இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு, அவர் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என திரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement