• Apr 20 2024

துணிவு படத்தின் தூள் கிளப்பும் ஹாட் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம் வேதா நடிகர்..அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் கதாநாயகனா நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியார் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

 வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸ் கதாபாத்திரங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் இருக்கும் போட்டோவை போட்டு துணிவு படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருவதாக கூறியிருந்தார்.


இவரைத் தொடர்ந்து  ஹீரோயின் மஞ்சு வாரியர் தனது டப்பிங் போர்ஷனை முடித்து விட்டேன் என போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது நடிகர் பிரேம் குமார் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை முடித்து விட்டேன் என பதிவிட்டு அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார்.


துணிவு படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளை நடிகர் அஜித்தை தவிர்த்து ஒட்டுமொத்த படக்குழுவினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். அஜித் சார்பாக அவரது மனைவி ஷாலினியும் இன்ஸ்டாகிராமில் இணைந்து ப்ரொமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளார். படக்குழுவினரும் தொடர்ந்து துணிவு படம் குறித்த அப்டேட்களை கொடுத்து வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement